lundi 3 mai 2010

தமிழ்வாணி - முத்தமிழ்ச் சங்கம் 12ஆம் ஆண்டு விழா

கடந்த மே மாதம் 2ஆம் தேதி பிரான்ஸ் இந்திய இல்லத்தில் நடந்த தமிழ்வாணி முத்தமிழ்சங்க இலக்கிய விழாவில் நடைபெற்ற இலக்கிய சிறப்புரைகள் தலப்புகளை பற்றி நமது பார்வை.

முதல் தலைப்பு - தற்காலப் பார்வையில் திருக்குறள்
தற்காலத்தில் தமிழர்களாகிய நாம் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்களாக ஆகிவிட்டோம் என்பதற்கு இந்த தலைப்பே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதுவும் நம்முடைய அடியார்க்கன்பன் , அட அதாங்க நம்ம தமிழ்வாணி முத்திங்களிதழ் ஆசிரியருங்க... - என்னது தமிழ்வாணி இதழா ? இப்படி கேட்டுக்கிட்டே போனா என்னால ஒன்னும் எழுத முடியாது. என்ன கொஞ்சம் எழுத விடுறிங்களா?

நம்ம அடியார்க்கன்பனே அட அதாங்க நம்ம ஜெயராமன் மிஸ்யே, இப்படி ஒரு தலைப்பை வைத்து இருக்கின்றார் என்றால் அவரும் உலகத்தை பகுத்தறிய முற்பட்டுவிட்டர் என்பதனையே எடுத்துக்காட்டுகிறது.

அட அப்படின்னா ஒரு பொல்லாத தலைப்பை எடுத்துப்புட்டாருன்னு தானே கேட்கிறிங்க ? அமாம் அன்பர்களே திருக்குறளை தற்காலப் பார்வையில் நோக்குவது என்பது ஒரு பெரிய விஷயம். அதுவும் தெய்வப்புலவர் திருவள்ளுவரையே புடம் போட்டு பார்க்கும் தைரியம் நம்ம அடியார்க்கன்பனுக்கு வந்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குறிய விஷ்யம். ஏன்னா இவரு " ஈனப் பறையன்" ன்னு நாகூசாமல் பாட்டெழுதிய பாரதியை தற்கால நவீன பார்வை கொண்டு பார்க்க அஞ்சி நடுங்கியவர், இப்போது திடுதிப்பென்று வள்ளவனுக்கே ஈரடி எழுசீரா ?

என்னப்பா ரொம்ப பில்டப் கொடுக்கிறியேன்னு பார்க்காதீங்க, நேரடியா விஷ்யத்துக்கு வந்திடுவோம்.

அட அப்படி என்னதாங்க இருக்கு இந்த திருக்குறள்ள தற்கால பார்வையோட நோக்கறதுக்கு... சரி எதாவது ஒரு அதிகாரத்தை எடுத்துக்கிட்டு அதுல என்னதான் இருக்குன்னு பார்ப்போம்.

அதிகாரம் பிறனில் விழையாமை

141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

142.அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

143.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

144.எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

145.எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

146.பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

147.அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

148.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

149.நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

150.அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

நம்ம வள்ளுவர் மாமா என்ன சொல்றாருன்னு புரியுதா ? சிம்ப்ளா சொன்னா அடுத்தவன் பொருளாகிய, அதாவது பிறன் மனைவி, நம்பியவரின் மனைவி, பிறரது உரிமையான பெண் ... அப்படின்னு அடுக்கிக்கொண்டே போகிறார் ...
இவர்களை பார்ப்பது, விரும்புவது, அவர்களிடம் செல்வது, நெறி தவறி நடப்பது, தோளை அணைப்பது போன்றவற்றை செய்யாத ஆண்மகன் பெறாண்மையுடையவன், அறத்தோடு இல்வாழ்கை வாழ்பவன், ஒழுக்கமுடையவன், நன்மைக்குறியவன் ... அப்படிங்கிறாரு.
அதே நேரத்தில் அப்படி அடுத்தவர் உரிமைப் பொருளாகிய மனைவியை விரும்பவர் அறியாமையுடையவர், தீ நெறியுடையவர், செத்த பிணத்திற்கு ஒப்பானவர், சிறுமை பண்புடையவர், அழியாத பழி அடைவார்; பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நாங்கு குற்றங்களை செய்தவராவார்; அப்படி இப்படின்னு அடுக்கிக்கொண்டே போகிறார் வள்ளுவர்.
யோவ் இது தெரிஞ்ச விஷ்யம் தானே- இதுல என்னத்தையா கண்டுட்டே அப்படி நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அவசரம் வேண்டாம் ....

அடுத்தவன் மனைவியை அபகரிப்பது பாவம் தானே- நம்ம வள்ளுவர் சரியாகத்தானே சொல்லி இருக்கிறாரு?

அதாவது அவருக்கும் மனைவி என்பவள் ஆடவனின் உடைமைகளில் ஒன்று அவ்வளவுதான். அதை அபகரிக்காதேன்னு ஓன்னு ஒப்பாரி வைக்கிறார்.
உலகத்தில் உன்னதனமான தாயைப் பற்றியோ தாய்மையைப் பற்றியோ ஒரு வரிகூட எழுத மனமில்லாத இந்த வள்ளுவருக்கு ஒரு பெண்ணை அடுத்தவனின் உடைமைப் பொருளாக பார்க்கும் இந்த ஊனப் பார்வையைத்தான் நம்முடைய தற்கால பகுத்தறிவுப் பார்வை பார்க்கிறது.

ஒரு தப்பு செய்யும் மாணவனுக்கு பெஞ்சு மேல் நிற்கச் சொல்லி தண்டனை வழங்குவது போல், எப்போதும் உட்கார்ந்திருக்கும் வள்ளுவனை குமரியில் நிற்கவைவிட்டார் கலைஞர். பேஷ் பேஷ்...

இப்படியாக திருக்குறளை புடம்பொட்டு புரட்டி எடுத்திருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றேன். வெறும் போற்றி போற்றி பாடுதலும், கம்ப இராமயணத்தில் வரும் சீதையின் பாவடையில் தமிழை தேடி வந்த அடியார்க்கன்பனுக்கு இந்த துணிவு வந்திருப்பது நமக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.


அடுத்த தலைப்புகளை பின்னர் பார்ப்போம் ...

கம்பனை விஞ்சும் கொம்பனும் உண்டா ?