mercredi 29 décembre 2010

சிறைக்கு போவாரா ஜெயந்திரர்

இந்தியாவின் பார்வையை ஒட்டுமொத்தமாகத் தமிழகம் பக்கம் திருப்பிய அந்த கைது நடவடிக்கையை மறக்க முடியாது. 2004ஆம் ஆண்டு தீபாவளி இரவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். வரதராஜபெருமாள் கோவில் ஊழியர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தான் அவரை ஹைதராபாத்திலிருந்து கைது செய்து அழைத்து வந்தது எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம்.

சங்கரராமன் கொலை வழக்கை பல வழிகளிலும் ஜெயேந்திரர் தரப்பு இழுத்தடிக்க.. நீண்ட போராட்டத்திற்குப்பிறகு இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் ஒவ்வொருவ ராக பல்டி அடித்துவந்த நிலையில், ஜனவரி 21-ந் தேதி அப்ரூவர் ரவி சுப்ரமணியன் சாட்சியமளிக்க வருகிறார் என்றதும் கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது.

கைது செய்யப்பட்டபோது ரவி சுப்ரமணியன் கொடுத்திருந்த 164 வாக்குமூலத்தில், ""அப்புவுக்கு சொந்தமான ஃபோர்டு ஐகான் காரில் கதிரவன், நான், ரஜினிஜிந்தா மற்றொருவர் ஆகியோர் போய் சங்கரராமன் இருப்பிடத்தை அடையாளம் காட்டினோம் . பெரியவரை தனி அறையில் சந்தித்தேன். 5 லட்சம் பணம் கொடுத்து அப்புவிடம் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்'' என்று தெரிவித்திருந்தார். அவர் இப்போது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையை எதிர்கொள்கிறார் என்பதால் அனைத்து மட்டங்களிலும் எதிர்பார்ப்பு மிகுந் திருந்தது. நாமும் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தோம்.

ஜெயேந்திரர் கேரளாவில் இருந்தார். விஜயேந்திரரோ நீதிபதி அறைக்கு செல்லும் வழியில் பீரோவுக்கிடையே சந்தில் சேர் போட்டுக்கொண்டு போலீசாருக்கும் கோர்ட் ஊழியர்களுக்கும் ஆசி வழங்கி, குங்குமம் வைத்து விட்டுக்கொண்டிருந்தார். நாம் அங்கே சென்றதும் நமக்கும் குங்குமம் வைக்க முயன்றார். நாம் சற்று விலகியதும், ஒரு துண்டு பேப்பரில் குங்குமத்தை மடித்துக்கொடுத்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது பெண் பக்தர், "சுவாமி.. இவா நக்கீரன்' என்றதும் விஜயேந்திரர் சட்டென எழுந்து நின்றுவிட்டார். படபடப்பும் வியர்வையுமாக விழிபிதுங்கி நின்றவர், அசட்டு சிரிப்பு சிரித்தார். அப்போது அவரது செல்போன் சிணுங்க, கேரளாவிலிருந்து ஜெயேந்திரர் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காலை 10.30 மணிக்கு கூண்டில் ஏறிய அப்ரூவர் ரவி சுப்ரமணியன், கையோடு வாட்டர் பாட்டிலையும் வைத்திருந்தார். 20 நிமிடத்திற்கொரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டே குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், "நீதிபதி முன் நீங்கள் சுயமாகத்தான் 164 வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்' என்றபடி, சங்கர ராமன் கொலையையும், அடையாளம் காட்டுவதற்காக காரில் சென்ற சம்பவத் தையும் பற்றி கேட்க, "எனக்கு தெரியாது. ஞாபகம் இல்லை' என்று ரவி சுப்ரமணியன் சொன்னதும் பலருக்கும் அதிர்ச்சி. அப்போது ஜெயேந்திரர் வழக் கறிஞர் குறுக்கிட்டு, "முந்தைய ஆட்சியின் மிரட்டலுக்குப் பயந்தும், மனைவி-பிள்ளைகளை நினைத்தும் போலீஸ் சொல்லி கொடுத்தது போல வாக்குமூலம் கொடுத்துள்ளீர்களா?' என்று கேட்க, "ஆமாம்.. ஆமாம்' என்றார் ரவிசுப்ரமணியன். பழைய நக்கீரன் இதழை எடுத்து, ரவிசுப்ரமணியன் தற்கொலை? தேடப்படும் அப்பு பேட்டி என்ற செய்தி யைக்காட்டி, ""உங்களை கொலைசெய்து விட்டு, தற்கொலை என்று சொல்லி விடுவோமென போலீஸ் மிரட்டியுள்ளது. அதற்குப் பயந்துதான் பொய்யான வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்'' என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டதும், "ஆமாம்' என்றார் ரவிசுப்ர மணியன்.

அவர் விசாரிக்கப்பட்டுக்கொண் டிருந்த நேரத்தில், விஜயேந்திரர் பக்கத் தில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள், ""ரவி எல்லாத்தையும் மாத்தி சொல் லிட்டான். சந்தோஷமா இருக்கு'' என்றனர் கிசுகிசுப்பாக. ரவி சுப்ரமணியத்தின் வாக்குமூலத்தை பிறழ்சாட்சி (பல்டி யடித்தவர்) என புதுவை நீதிமன்றம் பதிவு செய்தது. அவர் சந் தோஷத்துடன் வெளியே வர, எதிர்த்தரப்பும் சந்தோஷ மாக இருந்தது. செப்டம்பர் மாதம் குறுக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து, சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமாமகேஸ்வரி, மேனேஜர் கணேஷ், துரைக்கண்ணு, சங்கர மட ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்க ளின் முந்தைய வாக்குமூலத்திலிருந்து மாறுபட்டே சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் நாம் கேட்டபோது, ""மொத்தம் 370 சாட்சிகள். அதில் 50 சாட்சிகளை முதலில் தேர்வு செய்து, அதிலும் 10 சாட்சிகளை ஒதுக்கிவிட்டு 40 சாட்சிகளை விசாரணைக்கு கொண்டுவந்தோம். 20 சாட்சிகள் பல்டியடித்துவிட்டார்கள். மீதி சாட்சிகள் அரசு தரப்புக்கு சாதகமாக உள்ளனர் . குறுக்கு விசாரணையில் சிலர் பல்டி அடித்தாலும், ஆர்கியூமெண்ட் நடக்கும்போது கேஸை நல்லா நடத்தலாம். அப்ரூவர் ரவி சுப்ரமணியன் விவரம் தெரிந்தவர்.

கொலைக்கான பணம் செட்டில் மென்ட்டான பிறகு அவர் விமானத்தில் மும்பை சென்றதற்கும் அங்கு தங்கியதற்குமான ஆதாரங்கள் இருக்கிறது. திருச்சி லாட்ஜில் தங்கியதற்கான ஆதாரமும் உள்ளது. ரவிசுப்ரமணியன் செல்போனிலிருந்து அப்பு செல்லுக்குப் பேசியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. வீடியோ-ஆடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த வழக்கை வலுவாக நடத்த முடியும்'' என்றார்.

அப்ரூவர் ரவி சுப்ரமணியனுக்கு ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை. அவரே ஜோதிடமும் பார்க்கக்கூடியவர். நக்கீரனிடம் முன்பு அவர் பேசிய போது, ஜெயேந்திரர் ஜாதகப்படி அவர் நீண்டகாலம் ஜெயிலில் இருப்பார் என்று சொல்லி யிருந்தார். வழக்கின் போக்கு எப்படி இருக்கப் போகிறது?

இதுதான் நியாயத் தின்மீது நம்பிக்கை உள்ளவர்களின் கேள்வி.

-காசி
நக்கீரன்-24-01-2010
mardi 28 décembre 2010

பகவானுக்கு எப்படி சேவை செய்வது ?



அப்படின்னா சாமி, திருப்பதியில் இருக்கிற செல்வத்தையெல்லாம் உலகமெல்லாம் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு பகிர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்யுங்கோ.... பகவான் ரொம்பா சந்தோஷப்படுவா இந்த லோகமும் ஷேமமாயிருக்கும். என்ன நான் சொல்றது ?

பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.