lundi 25 janvier 2010

உயிருக்கு போராடும் எஸ்.ஐ.-ஆம்புலன்சுக்கு காத்திருந்த மந்திரிகள்


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.


தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நன்றி அதிகாலை.காம்
jeudi 21 janvier 2010

தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு

தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு
mardi 12 janvier 2010

உணர்வாரா இசைஞானி?

மேட்டுக்குடி இசைவடிவத்தைப் பின் தள்ளி, நாட்டுப்புற மக்களின் இசை வடிவத்தை நாடறியச் செய்த இசைமேதை இளையராஜா, கலைஞரால் இசைஞானி என்று பெருமைப்படுத்தப்பட்டவர் என்பதை நாடறியும். இலண்டன் நகரில் சிம்போனி இசையை இசைத்துக்காட்டிய ஒரே ஒடுக்கப்பட்ட திராவிட இசைமேதை அவர்.

மதுரை ஆதினம், காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை இயேசு, நபி என்று புகழ் பாடியபோது, “இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்கள் யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க” என்று இளையராஜா ஜெயேந்திரரைப் பற்றி பேசி காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்தியதாக ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திருச்சியில் மாணவிகள் மத்தியில் ஜெயேந்திரர் பேசுவதாக இருந்த கூட்டத்தில் ஓர் ஆசிரியை, மாணவிகளைப் பார்த்து யாரெல்லாம் மாதவிலக்கானவர்களோ அவர்கள் அப்போது அங்கே இருப்பது தெய்வக் குத்தமாகும் என்று சொன்னபோது, ஒரு மாணவி, “இவ்வளவு சுத்தம் ஆச்சாரம் பார்க்கிறவர் ஏன் மேடம் ஜெயிலுக்குப் போகனும்” என்று திருப்பிக் கேட்டுள்ளார். உடன் இருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஜெயேந்திரர், பெண் தொடர்பு, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தலைவர், தன் 75 ஆம் பிறந்தநாள் விழாவில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த கருப்பு மனிதர் என்ற காரணத்திற்காக, கைபட்டு விடக் கூடாது என்ற “தீட்டுச்” சாத்திர வர்ணாசிரம சிந்தையால், தன் உதவியாளர் கையால் விருது கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

திருச்சி திருவரங்கம் கோயில் முதல் கோயில்களுக்காக இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த போதும், இளையராஜாவைச் சூத்திரனாகப் பார்த்து, அப்படியே நடத்தியிருக்கிறார் ஜெயேந்திரர்.

ஒரு தடவை பெரியார் திடலுக்குச் சென்ற இளையராஜா, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட திராவிடர்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மறுத்துவிட்டார். பரவாயில்லை. அப்படியானால் அந்த மரியாதை “அவாள்”களிடம் இருந்தாவது கிடைத்ததா? இல்லை! மாறாக தீட்டுக்குரிய சூத்திரனாகத்தானே காஞ்சி மடத்தலைவர் பார்த்தார்.

2008 ஆம் ஆண்டு, இளையராஜாவிற்கு பத்மஸ்ரீ போன்ற விருதுகளை இன்னும் வழங்காதிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து கவிஞர் அறிவுமதி நம் இதழில் எழுதியிருந்தார். இளையராஜாவின் இசை மேதமையை இப்போதும் நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

ஆனால் மதிப்பவர்களை மதிக்காமல், மதிக்காதவர்களை மதிக்கும் இளையராஜாவை அவாள்கள் அவமரியாதை செய்வதை இளைஞானி உணர்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை, நாம் உணர்கிறோம்!

-நன்றி கீற்று இ.இளமாறன்