jeudi 3 février 2011

இவனை எந்த செருப்பால் அடிக்கலாம் ?



அப்படீன்னு கோபம் வந்தால் பெண்கள் கேட்பார்களா கேட்கமாட்டார்களா ?
mardi 18 janvier 2011

Lorry driver passes IPS Exam

jeudi 6 janvier 2011

அபிதான சிந்தாமணி வெளிவந்த கதை

அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ. சிங்கார வேலு முதலியார். 1855 இல் சென்னையில் பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1890 இல் இந்நூலை உருவாக்க பல்லாயிரம் பக்கங்கள் கைப்பிரதியாக எழுதிச் சேர்ந்தார் சிங்காரவேலு முதலியார். இன்றைய அபிதான சிந்தாமணி ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாக மிகப்பொடி எழுத்து. அப்படியானால் எப்படிப் பார்த்தாலும் கடைசிக் கைப்பிரதி 9000 பக்கங்களுக்கு இருந்திருக்க வேண்டும். ஊர் ஊராகச் சென்று சிறு பிரசுரங்களையும் ஏடுகளையும் சேகரிக்க ஆரம்பித்தார். செவிவழிக்கதைகளை திரட்டினார்.

ஸ்தலபுராணங்களை ஓதுவார்களிட மிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதை சொல்லிகள், ஹரிகதைப் பிரசங்கிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டே இருந்தார்.

சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.

சென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணத்தை நாடினார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைபிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டி பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவ வேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார்.

அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேஷகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது ‘நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருகிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை குயுரேட்டரும் பச்சையப்பன் கல்லூரி தருமகர்த்தாவுமான வ. கிருஷ்ணமாச்சாரியிடம் சென்று மன்றாடினார் சிங்காரவேலு முதலியார்.

அவர் சில அச்சுக்கூடத்தவர்களிடம் கேட்டுவிட்டு இதற்கு செலவு நிறைய ஆகுமே என்று சொல்லி போகச் சொல்லிவிட்டார். மனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார்.

பாண்டித்துரை தேவர் சிங்கார வேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையை பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார்.

அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் ஆனந்தக்களிப்பு அடைந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார்.

1910 இல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுப்போன விஷங்களை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932 இல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்.

அபிதான சிந்தாமணி எப்படிப்பட்ட நூல்? முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் அனேகமாக எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே ரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை.

ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.

இரண்டாவதாக தொன்மையான சாஸ்திர நூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தொன்மையான தமிழ் வாழ்க்கையின் சித்திரம் கற்கக் கற்க முடிவிலாது விரியும். தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப்பற்றிய தகவல்கள் என இந்நூல் அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை.

மூன்றாவதாக தொல் தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் தமிழ் நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.

மூன்றாவதாக தமிழரின் அன்றாட வாழ்வியல் குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உபசாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள்... நூறு வயது கண்ட ஆயிரம் பாட்டி தாத்தாக்களுக்குச் சமம் இந்த நூல்.

ங்காரவேலு முதலியார் தமிழுக்கு பெருந்தொண்டு புரிந்திருந்தாலும் சாதாரணமானவர்கள் நினைக்கப்படும் அளவுக்குக் கூட அவர் நினைவு கூரப்படுவதில்லை. அவரைப்பற்றிய தகவல்களே கூட அரிதாகவே உள்ளன. அபிதான சிந்தாமணி மிகப்பழைய கல்லச்சுப்பதிப்பே இப்போதும் ஒளிநகலெடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதை மறுபடியும் அச்சுகோர்த்து பிழைதிருத்தம் செய்து புதிய பதிப்பு கொண்டுவருவதற்கு நம்மிடம் இன்று அறிஞர்கள் இல்லை.

இந்த மாபெரும் நூலை உரிய முறையில் பிழைதிருத்தம் செய்வது எத்தனை பெரும்பணி என்பதை சொல்ல வேண்டியதில்லை. அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலை போன்றவை வெளியிட்டுள்ள பிழை மலிந்த நூல்களைப் பார்க்கையில் தமிழ் கலிவித்துறையால் அது சாத்தியமா என்ற பிரமிப்பே ஏற்படுகிறது.

தமிழகத்துப் பேராலயங்கள், மாபெரும் ஏரிகள் போன்றவற்றைப் பார்க்கையில் இந்த மகத்தான செல்வங்களை பேணி வைத்துக்கொள்ளக்கூட திறனற்ற தலைமுறையினராக இருக்கிறோமே என்ற சேர்வு ஏற்படுவதுண்டு. ஒவ்வொரு முறை அபிதான சிந்தாமணியைப் பார்க்கும் போதும் அதே நினைவுதான் எழுகிறது.

mercredi 5 janvier 2011

திருக்குறள் திலீபன் வளர்க! வாழ்க!



திருக்குறள் திலீபன்

இடைவிடாத பணிகளுக்கு இடையே அவ்வப்பொழுது மகிழ்ச்சிச் செய்தி ஏதேனும் காதில் விழுந்து ஊக்கம் தருவது உண்டு. அவ்வகையில் ஓரிரு நாளுக்கு முன்பு செல்பேசியில் ஓர் அழைப்பு வந்து. திருவாளர் ம. தங்கச்சாமியார் பேசினார். காரைக்குடியில் வாழும் அண்ணன் மு.பாரி அவர்கள் அந்த அன்பரை என்னிடம் ஆற்றுப்படுத்தியிருந்தார் என்று அறிந்தேன்.

திரு.தங்கச்சாமியார் மகன் பெயர் திலீபன் என்றும் பதினொன்றாம் வகுப்பில் படிக்கின்றார் என்றும் அறிந்தேன். கவனகக் கலையில் வல்லவர் என்றும் திருக்குறளின் குறட்பாக்கள் அனைத்தும் மனப்பாடம் என்றும் குறிப்பிட்டார். கி.பி.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10,000 ஆம் ஆண்டு வரை உள்ள எந்த மாதம், ஆண்டு, நாள் குறிப்பிட்டாலும் கிழமையைச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் என்றும் அறிந்தேன். தன்னையொத்த குழந்தைகளுக்கு இலவசமாக நினைவுக்கலையையும், திருக்குறளையும் பயிற்றுவிக்கின்றாராம். குறள்மணிகள் சிறுவர் நூலகம் அவர் இல்லில் உள்ளது. உலக நாடுகளின் பெயரை ச்சொன்னால் தலைநகரைச் சொல்வார் என்றார். தமிழக அரசு திருக்குறள் முழுமையும் சொன்னால் மாதந்தோறும் 1000 உருவா வழங்கும் திட்டத்தில் திலீபனுக்கு நிதியுதவி கிடைக்கின்றது. அப்படி என்றால் அவர் பற்றிய குறிப்பை உடன் அனுப்பும்படி வேண்டிக்கொண்டேன். அதன்படி இன்று ஒரு குறுவட்டும், செய்திக்குறிப்பும் வந்தன. குறுவட்டை இயக்கிப் பார்த்தேன்.

செயா தொலைக்காட்சியில் திருக்குறள் திலீபனை இயக்குநர் விசு அவர்கள் அறிமுகப்படுத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்பே நான் திருக்குறள் பிரதிபா அவர்களின் கவனகக் கலையைக் கண்டு வியந்தவன். அவர்களைப் போல் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். நான் முன்பு பணி செய்த கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் பணி செய்த இரமேசு என்ற அஞ்சல் அதிகாரி என்னைப் பற்றி அறிந்து ஆரணி அடுத்துள்ள திமிரி என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவியை அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார்.

அந்த மாணவியின் பெயர் தீபா. எட்டாம் வகுப்பு அவர் படித்தார் என்று நினைவு. அவரின் திருக்குறள் ஆர்வத்தை அறிந்து அவர்களை நெறிப்படுத்தி 1330 குறட்பாக்களும் அறிந்தவராக மாற்றினேன். எங்கள் கல்லூரியின் தாளாளரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமாகிய சக்தி ப.அன்பழகன் அவர்களின் கவனத்திற்குத் தீபாவின் திருக்குறள் ஈடுபாட்டைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். எங்கள் தாளாளர் அவர்கள் பணப்பையை எடுக்க மறந்தாலும் அவர் வழிப்பயணத்தில் திருக்குறளை மறவாமல் எடுத்துச்செல்வதும், ஓய்வு நேரங்களில் படிப்பதும் நம் போலும் தமிழறிஞர்களிடம் திருக்குறள் பற்றி, வள்ளலார் பாடல் பற்றி உரையாடுவதும் அவர்களின் வழக்கம். எங்கள் தாளாளர் சக்தி ப.அன்பழகன் அவர்கள் பள்ளி மாணவி தீபாவைத் தம் செலவில் கல்லூரியில் உரிய காலத்தில் படிக்க வைக்க விரும்பினார்கள். அவருக்கு ஓர் உயர்பரிசில் உடனடியாக வழங்க நினைத்துத் தம் அறையில் அழகுடன் காட்சி தந்த ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தைப் பரிசிலாக வழங்கினார்கள். இவ்வாறு திருக்குறள் அறிந்தவர்களைப் போற்றிய எனக்குத் திலீபன் பற்றி செய்தி கிடைத்தால் விடுவேனா?

திருக்குறள் திலீபன் காரைக்குடியில் உள்ள மீ.சு.வி.மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றார். இந்தப் பள்ளி கவியரசு முடியரசனார் உள்ளிட்ட பெருமக்கள் பணிபுரிந்த பெருமைக்குரியது. 97 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றும் இந்தப் பள்ளியில்தான் இயக்குநர் சுப.முத்துராமன் உள்ளிட்டவர்கள் படித்தனர்.


மழலைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கும் திருக்குறள் திலீபன்


திருக்குறள் திலீபன்(இன்னொரு தோற்றம்)

அப்பள்ளியில் நன்கு படித்து வரும் திருக்குறள் திலீபன் எதிர்காலத்தில் உயர்படிப்பைத் தொடர உதவுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகக் கருதுகின்றேன். திருக்குறள் திலீபனின் தந்தையார் திரு.ம.தங்கச்சாமி ஐயா அவர்கள் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகின்றார். தமிழ்ப்பற்றும்,இனப்பற்றும் கொண்ட பெருமகனாரின் குழந்தை அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் உரிய குழந்தை என்று கருதிவிட முடியாது. திருக்குறள் திலீபன் உலகத் தமிழரின் சொத்து. அவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் கடமையாகும். திரைப்பட நடிகைகளை, நடிகர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அழைத்துத் தமிழ்ச்சங்கம் திறப்புவிழா நடத்தும் தமிழர்கள் தங்கள் செயலை நிறுத்தித் திருக்குறள் திலீபன் போன்ற அறிவுச்செல்வங்களைப் போற்றினால் நம் இனத்தில் இன்னும் பல திலீபன்கள் தோன்றுவார்கள்.

திருக்குறள் திலீபன் பதின்கவனகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவை: 1.குறள் கவனகம், 2.எண் கவனகம் 3. எழுத்துக் கவனகம் 4. கூட்டல் கவனகம், 5.பெயர்க் கவனகம், 6.ஆண்டுக் கவனகம், 7. மாயக் கட்டம்
8. வண்ணக் கவனகம், 9.தொடு கவனகம், 10.ஒலிக் கவனகம்

திலீபனின் தந்தையார் திரு.தங்கச்சாமியார் மேல் எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திலீபன் என்னும் அறிவுச்செல்வத்தை வழங்கியது மட்டும் அன்று. திரு.தங்கச்சாமியார் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மேல் பெரும் மதிப்புடையவர் என்பதும் ஐயாவுடன் பல காலம் பழகியவர் என்பதும் அறிந்து அவர்மேல் பன்மடங்கு மதிப்பு ஏற்பட்டது.

திருக்குறள் திலீபனைத் தொடர்புகொள்ள:

திருக்குறள் த.திலீபன்,
த / பெ. திரு.ம.தங்கச்சாமி,
4 / 1 நான்காவது வீதி,
முடியரசன் சாலை,
காரைக்குடி-630 001
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு

செல்பேசி + 91 94865 62716
செல்பேசி + 91 94872 14745

தகவல் -முனைவர் மு.இளங்கோவன்
samedi 1 janvier 2011

திரு.வி.க.வை எச்சில் இலை எடுக்கச் சொன்ன பார்ப்பனர்

ரிவோல்ட்பக்கங்களிலிருந்து....(7)

(1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்)

தேசியம் மற்றும் தீவிர சாதி எதிர்ப்பு எனும் தலைப்பில் ‘ரிவோல்ட்’ கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ன. காங்கிரசின் தேசியம் பார்ப்பனியமாகவும், சாதி வெறியாகவுமே வெளிப்பட்டதை காங்கிரஸ் மாநாடுகளில் நடந்த சம்பவங்களிலிருந்து ‘ரிவோல்ட்’ எடுத்துக்காட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியை ‘சாத்தான்களின் ஆட்சி’ என்று பேசிய தேசியப் பார்ப்பனர்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் கொழுத்த சம்பளம் பெற்று, பிரிட்டிஷ் விசுவாசிகளாக செயலாற்றியதை ‘ரிவோல்ட்’ பட்டியலிட்டு அம்பலப்படுத்தியது. ‘இது தான் தேசியமா’ என்ற தலைப்பில் ‘ஈ.வி.ஆர்.’ என்ற பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை, பார்ப்பனர் களின் ‘தேச பக்தியை’ அம்பலப்படுத்தியது. (27 மார்ச் 1929)

காங்கிரஸ் கட்சி செயலாளர் ரெங்கசாமி அய்யங்கார் மேடைகளில், “பிரிட்டிஷ் அரசை செயல்படாது தடுக்க வேண்டும்; சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க வேண்டும்” என்று முழங்குவார். அவரது சகோதரர் எஸ். சீனிவாச அய்யங்கார், அதே குகைக்குள் சாதுரியமாக நுழைந்து கொண்டு, வழக்கறிஞர் தொழில் நடத்தி, ஒவ்வொரு நாள் காலையிலும் பிரிட்டிஷ் நீதிபதிகளின் காலை நக்கிக் கொண்டிருப்பார். பிரிட்டிஷ் பிரதி நிதிகளை ‘கனவான்களே’ என்று அழைத்துக் கொண்டிருப்பார்.

தேசபக்தியில் ஊறிப் போய் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் சீனிவாச சாஸ்திரி, டி.ரெங்காச்சாரி, மணி அய்யர், வி.கிருஷ்ண சாமி அய்யர், சி.பி. இராமசாமி அய்யர், சி. விஜயராகவாச்சாரிகள் எல்லாம் தங்கள் குடும்பத்தினரை எல்லாம் அரசு உயர் பதவிகளுக்கு அனுப்பி - அரசிடமிருந்து கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். 3 சதவீதமுள்ள பார்ப்பனர்கள் 97 சதவீத பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியை முடக்குவோம்; விரட்டி அடிப்போம் என்று மேடைகளில் வீரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே புதிய புதிய அரசியல் கட்சிகள், சுதந்திரக் கட்சி, சுயராஜ்யக் கட்சி, ஹோம் ரூல் இயக்கம் என்று முளை விட்டு ஏழைகளுக்கு பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு, அதற்காக புதிய பதவிகள், புதிய குழுக்கள், வெளிநாட்டுக்குச் செல்லும் பிரதிநிதிகள் என்று புதிய பதவிகளை உருவாக்கிக் கொண்டனர். ‘ஆங்கிலம் அன்னிய மொழி அதைப் படிக்காதீர்கள்’ என்று மேடைகளில் பேசிக் கொண்டு தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்தனர். சத்திரச் சோறு சாப்பிட்ட பார்ப்பனர்கள், சத்திரத்தின் உரிமையாளர்களாகவே பதவி வாங்கிக் கொண்டு விட்டனர். தேசியப் பார்ப்பனர்கள் பதவிகளுக்கு வராத காலத்தில் அரசாங்கம் வரி மூலம் வசூலித்த தொகை ரூ.25 கோடியிலிருந்து ரூ.30 கோடி வரை தான்.

40 ஆண்டுகளில் பார்ப்பனர்கள் பதவிகளுக்கு வந்து கொழுத்த சம்பளம் வாங்கியதால் மக்களிடமிருந்து கூடுதல் வரி விதித்து 140 கோடியிலிருந்து 150 கோடி வரை, அரசு வருவாயை அதிகரித்துக் கொண்டது. “சுதந்திர வீரர்களாக” கூறிக் கொண்டு நாட்டின் வருவாயைச் சுரண்டிய பார்ப்பனர்கள், ஒரு காலத்தில் புரோகித பிச்சை எடுத்தவர்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் விவசாயிகளாக வும், வணிகர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்தவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் இழந்து வெளிநாடுகளுக்கு கூலிகளாக வேலை தேடி ஓட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், இந்த மண்ணில் தேசபக்தி நாடக வேடம் கட்டிக் கொண்டு காங்கிரஸ் ஆட்டம் போடுகிறது என்று அடுக்கடுக்கான வாதங்களை பெரியார் முன் வைத்தார்.

“அவதூறு பிரச்சாரங்களால் சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிட முடியாது. சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றே தீரும் என்று துணிவுடன் கூறுவேன்” என்று “ஆர்.எஸ்.” என்ற புனைப் பெயரில் அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த தோழர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (‘ரிவோல்ட்’ ஏப்.17, 1929)

அதில் காங்கிரஸ் கட்சியில் நடந்த ‘வர்ணாஸ்ரம’ங்களை அம்பலப்படுத்தியுள்ளார். 1910 ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர்கள் சாப்பிடுவதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு முதலில் உணவு பரிமாறப்பட்டது. அதற்குப் பிறகு எஞ்சிய உணவுதான் பார்ப்பனரல்லாதாருக்கு தனியாக பரிமாறப்பட்டது. இரண்டாவது நாள் இன்னும் மோசம். பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலைகளை அப்படியே கட்டுரையாளர் உள்பட பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் தங்கிய அறையில் கொண்டு வந்து போட்டிருந்தனர். இலையிலிருந்து கழிவுகள் அறை முழுதும் வழிந்தோடி துர்நாற்றம் வீசியது. அந்த சூழ்நிலையில் பார்ப்பனரல்லாதார் உணவருந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கட்டுரையாளர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளியே ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். இத்தனைக்கும் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள், உணவுக்கான கட்டணத்தை செலுத்தி மாநாட்டுக்கு வந்தவர்கள். பார்ப்பனரல்லாத வர்களை ‘பார்ப்பன வெறுப்பாளர்கள்’ என்று பட்டியலிட்டு, தனியாக ஒதுக்கி வைத்து அவமதித்தார்கள். சுயமரியாதை இயக்கத்தை கடுமையாக விமர்சித்து எழுதி வந்த பார்ப்பனரல்லாத தலைவரான திரு.வி.க.வும் அவமானத்திலிருந்து தப்பவில்லை. ஒரு முறை ‘படித்த பார்ப்பனர்’ ஒருவர், திரு.வி.க.வை அவரது வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தார்.

பார்ப்பனர் மட்டும் தனது வீட்டின் சமையலறைக்குள் சென்று வயிறு முட்டச் சாப்பிட்டு, திரும்பி வந்து வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டே, திரு.வி.க.வைப் பார்த்து, வீட்டுக்கு வெளியே சென்று சாப்பிடுமாறு கூறினார். “எச்சில் இலை எடுத்து, சாணம் போட்டு கழுவுவதற்கு சங்கடமிருந்தால், வேலைக்காரி அதைச் செய்வாள். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று திரு.வி.க.விடம் கூறினார், அந்த ‘படித்த நாகரிகமான பார்ப்பனர்’.

எதற்காக இப்படி, உணவுக்கு அழைத்து அவமானப்படுத்த வேண்டும்? இந்த பார்ப்பனர்கள் தான் சுயமரியாதை இயக்கத்தை நோக்கி குற்றம் சாட்டுகிறார்கள். சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியை இவர்களால் தடுக்க முடியாது என்று எழுதினார் கட்டுரையாளர் “ஆர்.எஸ்.”.

(காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் பெரியாரும் இப்படி பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை பெரியார் ‘குடிஅரசில்’ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

நன்றி கீற்று

mercredi 29 décembre 2010

சிறைக்கு போவாரா ஜெயந்திரர்

இந்தியாவின் பார்வையை ஒட்டுமொத்தமாகத் தமிழகம் பக்கம் திருப்பிய அந்த கைது நடவடிக்கையை மறக்க முடியாது. 2004ஆம் ஆண்டு தீபாவளி இரவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். வரதராஜபெருமாள் கோவில் ஊழியர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தான் அவரை ஹைதராபாத்திலிருந்து கைது செய்து அழைத்து வந்தது எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம்.

சங்கரராமன் கொலை வழக்கை பல வழிகளிலும் ஜெயேந்திரர் தரப்பு இழுத்தடிக்க.. நீண்ட போராட்டத்திற்குப்பிறகு இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் ஒவ்வொருவ ராக பல்டி அடித்துவந்த நிலையில், ஜனவரி 21-ந் தேதி அப்ரூவர் ரவி சுப்ரமணியன் சாட்சியமளிக்க வருகிறார் என்றதும் கோர்ட் வளாகம் பரபரப்பாக இருந்தது.

கைது செய்யப்பட்டபோது ரவி சுப்ரமணியன் கொடுத்திருந்த 164 வாக்குமூலத்தில், ""அப்புவுக்கு சொந்தமான ஃபோர்டு ஐகான் காரில் கதிரவன், நான், ரஜினிஜிந்தா மற்றொருவர் ஆகியோர் போய் சங்கரராமன் இருப்பிடத்தை அடையாளம் காட்டினோம் . பெரியவரை தனி அறையில் சந்தித்தேன். 5 லட்சம் பணம் கொடுத்து அப்புவிடம் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்'' என்று தெரிவித்திருந்தார். அவர் இப்போது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையை எதிர்கொள்கிறார் என்பதால் அனைத்து மட்டங்களிலும் எதிர்பார்ப்பு மிகுந் திருந்தது. நாமும் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகி யிருந்தோம்.

ஜெயேந்திரர் கேரளாவில் இருந்தார். விஜயேந்திரரோ நீதிபதி அறைக்கு செல்லும் வழியில் பீரோவுக்கிடையே சந்தில் சேர் போட்டுக்கொண்டு போலீசாருக்கும் கோர்ட் ஊழியர்களுக்கும் ஆசி வழங்கி, குங்குமம் வைத்து விட்டுக்கொண்டிருந்தார். நாம் அங்கே சென்றதும் நமக்கும் குங்குமம் வைக்க முயன்றார். நாம் சற்று விலகியதும், ஒரு துண்டு பேப்பரில் குங்குமத்தை மடித்துக்கொடுத்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த நடுத்தர வயது பெண் பக்தர், "சுவாமி.. இவா நக்கீரன்' என்றதும் விஜயேந்திரர் சட்டென எழுந்து நின்றுவிட்டார். படபடப்பும் வியர்வையுமாக விழிபிதுங்கி நின்றவர், அசட்டு சிரிப்பு சிரித்தார். அப்போது அவரது செல்போன் சிணுங்க, கேரளாவிலிருந்து ஜெயேந்திரர் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

காலை 10.30 மணிக்கு கூண்டில் ஏறிய அப்ரூவர் ரவி சுப்ரமணியன், கையோடு வாட்டர் பாட்டிலையும் வைத்திருந்தார். 20 நிமிடத்திற்கொரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டே குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸ், "நீதிபதி முன் நீங்கள் சுயமாகத்தான் 164 வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்' என்றபடி, சங்கர ராமன் கொலையையும், அடையாளம் காட்டுவதற்காக காரில் சென்ற சம்பவத் தையும் பற்றி கேட்க, "எனக்கு தெரியாது. ஞாபகம் இல்லை' என்று ரவி சுப்ரமணியன் சொன்னதும் பலருக்கும் அதிர்ச்சி. அப்போது ஜெயேந்திரர் வழக் கறிஞர் குறுக்கிட்டு, "முந்தைய ஆட்சியின் மிரட்டலுக்குப் பயந்தும், மனைவி-பிள்ளைகளை நினைத்தும் போலீஸ் சொல்லி கொடுத்தது போல வாக்குமூலம் கொடுத்துள்ளீர்களா?' என்று கேட்க, "ஆமாம்.. ஆமாம்' என்றார் ரவிசுப்ரமணியன். பழைய நக்கீரன் இதழை எடுத்து, ரவிசுப்ரமணியன் தற்கொலை? தேடப்படும் அப்பு பேட்டி என்ற செய்தி யைக்காட்டி, ""உங்களை கொலைசெய்து விட்டு, தற்கொலை என்று சொல்லி விடுவோமென போலீஸ் மிரட்டியுள்ளது. அதற்குப் பயந்துதான் பொய்யான வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்'' என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டதும், "ஆமாம்' என்றார் ரவிசுப்ர மணியன்.

அவர் விசாரிக்கப்பட்டுக்கொண் டிருந்த நேரத்தில், விஜயேந்திரர் பக்கத் தில் நின்றுகொண்டிருந்த பக்தர்கள், ""ரவி எல்லாத்தையும் மாத்தி சொல் லிட்டான். சந்தோஷமா இருக்கு'' என்றனர் கிசுகிசுப்பாக. ரவி சுப்ரமணியத்தின் வாக்குமூலத்தை பிறழ்சாட்சி (பல்டி யடித்தவர்) என புதுவை நீதிமன்றம் பதிவு செய்தது. அவர் சந் தோஷத்துடன் வெளியே வர, எதிர்த்தரப்பும் சந்தோஷ மாக இருந்தது. செப்டம்பர் மாதம் குறுக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து, சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமாமகேஸ்வரி, மேனேஜர் கணேஷ், துரைக்கண்ணு, சங்கர மட ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்க ளின் முந்தைய வாக்குமூலத்திலிருந்து மாறுபட்டே சாட்சியம் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் தேவதாஸிடம் நாம் கேட்டபோது, ""மொத்தம் 370 சாட்சிகள். அதில் 50 சாட்சிகளை முதலில் தேர்வு செய்து, அதிலும் 10 சாட்சிகளை ஒதுக்கிவிட்டு 40 சாட்சிகளை விசாரணைக்கு கொண்டுவந்தோம். 20 சாட்சிகள் பல்டியடித்துவிட்டார்கள். மீதி சாட்சிகள் அரசு தரப்புக்கு சாதகமாக உள்ளனர் . குறுக்கு விசாரணையில் சிலர் பல்டி அடித்தாலும், ஆர்கியூமெண்ட் நடக்கும்போது கேஸை நல்லா நடத்தலாம். அப்ரூவர் ரவி சுப்ரமணியன் விவரம் தெரிந்தவர்.

கொலைக்கான பணம் செட்டில் மென்ட்டான பிறகு அவர் விமானத்தில் மும்பை சென்றதற்கும் அங்கு தங்கியதற்குமான ஆதாரங்கள் இருக்கிறது. திருச்சி லாட்ஜில் தங்கியதற்கான ஆதாரமும் உள்ளது. ரவிசுப்ரமணியன் செல்போனிலிருந்து அப்பு செல்லுக்குப் பேசியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன. வீடியோ-ஆடியோ ஆதாரங்களும் இருக்கின்றன. இந்த வழக்கை வலுவாக நடத்த முடியும்'' என்றார்.

அப்ரூவர் ரவி சுப்ரமணியனுக்கு ஜோதிடத்தின் மீது அபார நம்பிக்கை. அவரே ஜோதிடமும் பார்க்கக்கூடியவர். நக்கீரனிடம் முன்பு அவர் பேசிய போது, ஜெயேந்திரர் ஜாதகப்படி அவர் நீண்டகாலம் ஜெயிலில் இருப்பார் என்று சொல்லி யிருந்தார். வழக்கின் போக்கு எப்படி இருக்கப் போகிறது?

இதுதான் நியாயத் தின்மீது நம்பிக்கை உள்ளவர்களின் கேள்வி.

-காசி
நக்கீரன்-24-01-2010
mardi 28 décembre 2010

பகவானுக்கு எப்படி சேவை செய்வது ?



அப்படின்னா சாமி, திருப்பதியில் இருக்கிற செல்வத்தையெல்லாம் உலகமெல்லாம் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு பகிர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்யுங்கோ.... பகவான் ரொம்பா சந்தோஷப்படுவா இந்த லோகமும் ஷேமமாயிருக்கும். என்ன நான் சொல்றது ?

பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

அர்ச்சனை பூக்கள்

வந்துபோனவங்க சாமி